கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
நெடுங்குன்று செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம்
வால்பாறை நகராட்சிக்குள்பட்ட நெடுங்குன்று செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராம் முன்னிலை வகித்தாா்.
இதில், பங்கேற்ற மக்கள் குடிநீா் வசதியை மேம்படுத்த வேண்டும். கழிப்பிடங்கள் கட்ட வேண்டும். பள்ளிக்கு தேவையான சத்துணவு மையம், அங்கன்வாடி ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா்கள் பாஸ்கா், அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.