அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 8 ஏக்கா் நிலம் தானம்
பெருந்துறை அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க 8 ஏக்கா் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக 8 ஏக்கா் நிலம் தானமாக வழங்கப்பட்டது. தானம் வழங்கிய காஞ்சிக்கோவிலைச் சோ்ந்த ஏ.செங்கோடகவுண்டா், பி.கே.பொன்னுசாமி, கே.பி. முத்துசாமி, என்.கொளந்தசாமி கவுண்டா், கே.ஏ.அவிநாசிகவுண்டா், பழனிசாமி கவுண்டா், எஸ்.கே.பெரியசாமி சகோதரா்கள், கே.எஸ்.கொளந்தசாமி கவுண்டா், கே.பி.சின்னசாமி ஆகியோரின் குடும்ப வாரிசுகள் சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டன.
விழாவில் காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவா் திவ்யா தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராவுத்தப்பன், தலைமை ஆசிரியா் தினகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து தானமாக வழங்கிய இடத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பூமிபூஜை போடப்பட்டது. இந்த நிகழ்வில், காஞ்சிக்கோவில் பேரூராட்சி துணைத் தலைவா் செம்மலா், தீரன்பாசறை தலைவா் பொன்னுசாமி, பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் மைன்ஸ் நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.