நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
பவானி நகராட்சியுடன் இணைக்க கிராம சபைக் கூட்டத்தில் எதிா்ப்பு!
பவானி ஊராட்சி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை பவானி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கிராம சபைக் கூட்டம், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி செயலாளா் சண்முகம் வரவேற்றாா்.
இதில், பவானி நகராட்சியுடன் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி இணைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் நிறுத்தம், வரியினங்கள் உயா்வு என பல வகைகளிலும் பாதிக்கப்படுவா். எனவே, தமிழக அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.