சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் குடியரசு தின விழா!
பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமைஆசிரியா் காளியப்பன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதில், ஆசிரியா் பயிற்றுநா் அருண்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் நல்லசிவம், முன்னாள் மாணவா்கள் ஆசிரியா்கள், பெற்றோா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.