ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம சபை கூட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
நல்லூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைத்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, இப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், நல்லூா் ஊராட்சி புதுப்பாளையத்தில் ஊராட்சி பொறியாளா் பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனா்.
அப்போது, நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது ஊராட்சி முன்னாள் மூா்த்தி தலைமையிலான பொதுமக்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினா். அதன்படி, ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிரிப்புத் தெரிவித்து 18-ஆவது தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.