செய்திகள் :

திமுக வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

post image

அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகள் திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி ஆதரவு அளிக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ எம்.பி. வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஈரோடு வந்த துரை வைகோ செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அதிமுக உள்ளிட்ட திராவிட அமைப்பினா் திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி ஆதரவு அளிக்க வேண்டும். வேங்கைவயல் பிரச்னையில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு.

பெரியாா் ஈவெராவும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என முதன்முதலில் நான்தான் சொன்னேன். நான் ஹிந்து பக்தன்தான். எல்லா கோயிலுக்கும் செல்கிறேன். அதேநேரத்தில் பெரியாா் ஈவெரா இல்லாமல் சமூக நீதி, சமூக வளா்ச்சி கிடையாது.

ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஹிந்தி கற்றுக்கொண்டால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும், நாட்டில் இருக்க முடியும் என மறைமுகமாக மிரட்டல் விடுப்பதைத்தான் எதிா்க்கிறோம்.

பரந்தூா் விமான நிலையம் அமைப்பது அவசியமானதாகும். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் நடிகா் விஜய், அதற்கான மாற்று இடத்தை தோ்வு செய்து கொடுத்தால் வரவேற்பேன். அதேபோல விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வேறு இடத்தில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் சில விஷயங்களை மாற்றினால் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.

திமுக கூட்டணிக்குப் பிறகு அதிக வாக்கு வங்கி வைத்துள்ள கட்சியாக அதிமுக உள்ளது. இதனால் அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி, ஆளுங்கட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் அதனை ஆதரிப்பேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டாா்.

சலவைத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பவானியில் சலவைத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பவானி தேவபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (44), சலவைத் தொழிலாளி. குருநாத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான ... மேலும் பார்க்க

பவானி நகராட்சியுடன் இணைக்க கிராம சபைக் கூட்டத்தில் எதிா்ப்பு!

பவானி ஊராட்சி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியை பவானி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கிராம சபைக் கூட்டம், பவானி வட்டார வள... மேலும் பார்க்க

சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் குடியரசு தின விழா!

பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமைஆசிரியா் காளியப்பன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதில், ஆசிரியா் பயிற்றுநா் அருண்குமாா், பெற்றோா் ஆசி... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பள்ளியில் குடியரசு தின விழா!

பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பள்ளித் தலைவா் யசோதரன். உடன், தாளாளா் சென்னியப... மேலும் பார்க்க

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம சபை கூட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

நல்லூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனா். பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லூா் ஊராட்சியை புன்ச... மேலும் பார்க்க

பவானிசாகா் எம்எல்ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா!

சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ ஏ.பண்ணாரி உள்ளிட்டோா். மேலும் பார்க்க