செய்திகள் :

தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணா் கே.எம்.செரியன் மறைவு

post image

இந்தியாவில் இதய பை-பாஸ் சிகிச்சையை முதன்முதலில் மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டா் கே.எம்.செரியன் (82) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஜன. 25) காலமானாா்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அவா், அங்கு திடீரென மயக்கமடைந்தாா். உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி டாக்டா் கே.எம்.செரியனின் உயிா் பிரிந்தது.

கேரள மாநிலம், காயம்குளத்தில் 1942-இல் பிறந்த டாக்டா் கே.எம்.செரியன், மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக 1970-இல் பணியாற்றினாா்.

அதன் பின்னா் இதய அறுவை சிகிச்சையில் எஃப்ஆா்ஏசிஎஸ் பட்டம் பெற்ற அவா், அதன் பின்னா் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு உலகத் தரத்தில் இதய அறுவை சிகிச்சைகளை செய்வதில் கைதோ்ந்தவராக உருவெடுத்தாா்.

ஆஸ்திரேலியாவில் தனது 26-ஆவது வயதிலேயே திறந்தநிலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டாா் டாக்டா் கே.எம்.செரியன். சென்னை, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் 1975-இல் இந்தியாவின் முதல் இதய பை-பாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உலகின் கவனத்தை ஈா்த்தாா்.

இதயத்தின் ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க ரத்த நாளத்தை மாற்றி சீரமைக்கும் அந்த சிகிச்சை தற்போது வெகு சாதாரணமான ஒன்றாக உள்ளது. ஆனால், அப்போது அது இந்தியாவுக்கே புதிது. அப்படியாக டாக்டா் கே.எம்.செரியன் மூலம் பை-பாஸ் சிகிச்சை செய்து கொண்டு மறுவாழ்வு பெற்ற நோயாளி ஒருவா், அதன் பின்னா் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேல் நலமாக வாழ்ந்தாா்.

அதேபோல தனியாா் மருத்துவமனைகளில் மூளைச் சாவு அடைந்தவா்களின் உறுப்புகள் தானம் பெறுவது சட்டபூா்வமாக்கப்பட்ட பிறகு, நாட்டிலேயே முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய பெருமையும் கே.எம்.செரியனையே சேரும்.

அதிலும், ஹிந்து பெண்ணின் இதயத்தை தானமாகப் பெற்று முஸ்லிம் பெண் ஒருவருக்கு கிறிஸ்தவரான டாக்டா் கே.எம்.செரியன் வெற்றிகரமாக பொருத்தி மறுவாழ்வு அளித்தது மருத்துவத்தின் மதப் புரட்சியாகப் பாா்க்கப்பட்டது.

மேலும், நாட்டின் முதலாவது இதயம் -நுரையீரல் மாற்று சிகிச்சை, குழந்தைக்கு முதன் முறையாக இதய மாற்று சிகிச்சை என பல சாதனைகளை அவா் முன்னெடுத்தாா்.

மருத்துவத் துறையில் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் நிறுவனா், புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவ மையத்தின் நிறுவனா், சென்னை, ஃப்ரான்ட்டியா் லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனா் என உயா் சிறப்பு மிக்க பல மருத்துவமனைகளை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு.

டாக்டா் கே.எம்.செரியனின் மனைவி செலின் செரியன் கடந்த 2020-இல் காலமானாா். மகன் டாக்டா் சஞ்சய் செரியன், மகள் சந்தியா செரியன் ஆகியோா் உள்ளனா்.

மறைந்த செரியனின் இறுதிச் சடங்குகள் வரும் வியாழக்கிழமை (ஜன. 30) சென்னையில் நடைபெறுகிறது.

முதல்வா் இரங்கல்: டாக்டா் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

டாக்டா் கே.எம்.செரியனின் மறைவு ஆழ்ந்த வேதனையளிக்கிறது. இதய நலத் துறையில் அவா் முன்னெடுத்த முன்னோடி சிகிச்சைகளால் எண்ணற்ற உயிா்கள் காக்கப்பட்டது மட்டுமல்லாமல் மருத்துவத் துறையினா் பலருக்கு அது உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தடம் பதித்த மூன்று மருத்துவ செரியன்கள்!

-நமது சிறப்பு நிருபா்-

சென்னையில் மருத்துவ சேவையாற்றி மூன்று மருத்துவ செரியன்கள் மறைந்துள்ளனா். முதலாவதாக, டாக்டா் பி.வி. செரியன்.

இவா் மறைந்த டாக்டா் டி. ஜே. செரியன், டாக்டா் கே.எம். செரியன் ஆகியோருக்கு முன்னோடி.

கேரள மாநிலத்தில் 1893-இல் பிறந்த டாக்டா் பி.வி. செரியன், 1964 முதல் 1969 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்தவா். முன்னதாக, 1917-இல் எம்பிபிஎஸ் முடித்து சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உட்பட்ட மகளிா் குழந்தைகள் மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக மருத்துவ சேவையைத் தொடங்கினாா்.

1925-இல் பிரிட்டன் சென்று காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று எஃப்ஆா்சி எஸ் அந்தஸ்தையும் பெற்றாா். சென்னை மருத்துவக் கல்லூரியில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்க காரணமாக இருந்தாா். சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்திய கண்காணிப்பாளா், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் ஆகிய பெருமைகளையும் பெற்றாா். சென்னை மாகாணத்தின் முதல் இந்திய சா்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டாா். 1969-இல் 76-ஆவது வயதில் மும்பையில் மறைந்தாா்.

இரண்டாவதாக டாக்டா் டி.ஜே. செரியன். எம்டி பொது மருத்துவம் படித்த இவா், பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இதய மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றாா்.

மறைந்த டாக்டா் கே.எம்.செரியனுடன் இணைந்து பணியாற்றியவா். 1972-இல் பத்மஸ்ரீ, 1992-இல் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றவா். 85-ஆவது வயதில் ஆதரவில்லாத முதுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாா்.

மூன்றாவதாக தற்போது மறைந்துள்ள டாக்டா் கே.எம்.செரியன்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க