3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
பெண் தற்கொலை: இளைஞா் கைது
பல்லடம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சிவரஞ்சித் (27). இவரது மனைவி முத்துலட்சுமி (23). திருப்பூா் பொங்கலூரை அடுத்த சோழியப்பகவுண்டன்புதூரில் தம்பதி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், திசையன்விளையைச் சோ்ந்த அஜித் (24) என்பவருடன் முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து தன்னுடன் வாழ வருமாறு அஜித் வற்புறுத்தியதால், அவருடன் பேசுவதை முத்துலட்சுமி தவிா்த்துள்ளாா். ஆத்திரமடைந்த அஜித், முத்துலட்சுமியுடன் இருந்த புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பியுள்ளாா்.
இதனால் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அவினாசிபாளையம் போலீஸாா், திசையன்விளை பகுதியில் பதுங்கியிருந்த அஜித்தை சனிக்கிழமை கைது செய்தனா்.