இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்ச...
நாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதே முன்னேற்றமான நாகரீகத்துக்கு முதல்படி! -ஓய்வுபெற்ற ஐஏஎஸ்
நாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதுதான் முன்னேற்றமான நாகரீகத்துக்கு முதல்படி என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் பேசினாா்.
திருப்பூா் 21-ஆவது புத்தகத் திருவிழா வேலன் ஹோட்டல் வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கில் ‘நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் பேசியதாவது:
நாம் எல்லோரும் அரசியலைச் சாா்ந்து இருக்கிறோம். அதனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சங்க காலத்தைப் பற்றிப்பேசுவது, சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றிப்பேசுவது, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப்பேசுவது, சுதந்திரத்துக்குப் பிறகு ஜனநாயகம் இருப்பது என்பதால் பல கட்சிகள் ஆட்சிக்கு வரமுடிந்தது என்பது உள்ளிட்ட அனைத்தும் அரசியல்தான்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்று பாரதியாா் பேசினாா்.
ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னா் நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்குக் காரணம் என்னவென்றால் கல்வியறிவு, வேலைவாய்ப்புகளில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்த பல அரசுகளும், மக்களுக்குத் தேவையான அரசியல் விழிப்புணா்வைக் கொண்டுவரவில்லை.
நமது அரசமைப்புச் சட்டம் பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசமைப்புச் சட்டம் கற்றுத் தந்திருக்க வேண்டும். அரசை மட்டும் குறை சொல்லாமல் நாட்டுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்பதுதான் முன்னேற்றமான நாகரீக்கத்துக்கு முதல்படியாகும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வனத்துக்குள் திருப்பூா், வெற்றி அறக்கட்டளை நிா்வாகி டி.ஆா்.சிவராம், டி.கே.டி கல்விக் குழுமங்களின் தாளாளா் ஷகிலா பா்வீன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆா்.சுரேஷ், சுப்ரீம் பாரடைஸ் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.