கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
பொங்கலூா் வலுப்பூா் அம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்குகிறது!
பொங்கலூா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையத்தை அடுத்த வானவன்சேரியில் உள்ள வலுப்பூா் அம்மன் கோயிலில் தோ்த் திருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தக் கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி இரவு விநாயகா் வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு காப்புக் கட்டுதல் மற்றும் கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகின்றன. அதைத் தொடா்ந்து அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது.
கட்டளைதாரா்களின் உபயத்துடன் அம்மன் திருவீதி உலா 3ஆம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ளது. 4ஆம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மதியம் 2 மணிக்கு அலகுமலை கைலாசநாதா் கோயில் முன்பு திருத்தோ் வடம் பிடித்து தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகிறாா்கள்.