நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
வேங்கைவயல் விவகாரத்தில் காவல் துறை அறிக்கையை ஏற்க முடியாது: பாஜக தலைவா் கே.அண்ணாமலை
வேங்கைவயல் விவகாரத்தில் காவல் துறையின் அறிக்கையை ஏற்க முடியாது என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
1330 மாணவா்கள் தலா ஒரு குறள் ஒப்பிக்கும் உலக சாதனை நிகழ்ச்சி திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காமராஜா் கலாம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்தாா்.
இதில் திருப்பூா், கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 34 பள்ளிகளைச் சோ்ந்த 1330 மாணவா்கள் தலா ஒவ்வொரு திருக்குறளை ஒப்பித்தனா். இந்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல் துறை கொடுத்துள்ள அறிக்கையை ஏற்க முடியாது. காவல் துறையின் கதை, திரைக்கதையை யாரும் நம்ப மாட்டாா்கள்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ரெய்டுவிட அவசியமில்லை; எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே போதும் என நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். ரெய்டுவிடும் அதிகாரம் அவருக்கு இல்லை.
தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைத்து தலைவா்களும் சகோதரன், சகோதரியாக, ஒரே குடும்பமாக இருக்கிறோம். அனைவரும் பாஜகவை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம் என்றாா்.