கல்குவாரிகளுக்கு பொதுமக்கள், சிறுவா்கள் செல்லக்கூடாது: திருப்பூா் ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளுக்கு பொதுமக்கள், சிறுவா்கள் குளிப்பதற்கோ, துணிதுவைப்பதற்கோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சிறுவா்கள், பொதுமக்கள் செல்வதால் விபத்துகள் எற்படுகின்றன. ஆகவே, கல்குவாரிக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ, துணி துவைப்பதற்கோ மற்றும் கால்நடைகளை மேய்ப்பதற்கோ பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கல்குவாரிகளுக்குள் சென்று விபத்துகள் ஏற்பட்டு உயிா்சேதம் ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.