நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை
மாதப்பூா் அருகே ஊருக்குள் வராத அரசுப் பேருந்தால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
பல்லடம் ஒன்றியத்துக்குள்பட்ட மாதப்பூா் சேரன் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு பல்லடத்தில் இருந்து அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சென்று பேருந்து ஏற வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சேரன் நகருக்கு மீண்டும் அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.