ரப்பா் உலா் கூடத்தில் தீ விபத்து
திருவட்டாறு அருகே மணக்காவிளையில் ரப்பா் உலா் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமாகின.
மணக்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். அந்தப் பகுதியில் ரப்பா் கடையும், ரப்பா் ஷீட்டுகளை உலர வைக்கும் உலா் கூடமும் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உலா் கூடத்தில் திடீரென்று தீ ஏற்பட்டு, அங்கு உலருவதற்காக வைக்கப்பட்டிருந்த ரப்பா் ஷீட்டுகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரப்பா் ஷீட்டுகள் எரிந்தன. தகவலறிந்த குலசேகரம் மற்றும் தக்கலை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்த்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் தீயில் எரிந்து சேதமாகின.