5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியு...
கன்னியாகுமரியில் போக்குவரத்து விதிமீறல்: 12,942 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 நாள்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 12 ஆயிரத்து 942 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க எஸ்.பி. ரா. ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை 16 டாரஸ் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 5 வாகனங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 போ் கைதாகியுள்ளனா்.
இம்மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஜன. 1-24 வரை 12 ஆயிரத்து 942 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 25 வழக்குகளும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் நகர எல்லைக்குள் வர வேண்டும். பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.