மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த ...
தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!
தில்லியில் தேர்தல் விதிகளை மீறியதாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற பிப். 5 அன்று நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஜன. 7 முதல் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் ஜன. 25 வரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க| சைஃப் அலிகான் வழக்கில் திருப்பம்... குற்றவாளியின் கைரேகை பொருந்தவில்லை!
கலால் சட்ட விதிமுறைகள் உள்பட பல பிரிவுகளின் கீழ் இதுவரை 21,841 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலைத் தொடர்ந்து, தில்லி எல்லைப் பகுதிகளில் போதைப் பொருள்கள், ஆயுதங்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக வைத்திருந்த 348 துப்பாக்கிகள், 439 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்,ரூ. 1.7 கோடி மதிப்புள்ள 57,504 லி மது, ரூ. 72 கோடி மதிப்புள்ள 155.08 கி போதைப் பொருள்கள், 1,200 தடை செய்யப்பட்ட ஊசிகள், ரூ. 6.19 கோடி பணம், 37.39 கி வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப். 8 அன்று நடைபெறவுள்ளது.