மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
இன்று காச்சிக்கூடா - கோட்டயம் சிறப்பு ரயில்
காச்சிக்கூடா - கோட்டயம் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலை சீசனை முன்னிட்டு காச்சிக்கூடா - கோட்டயம் இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தற்போது குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜன.26-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.
காச்சிக்கூடாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07169) மறுநாள் மாலை 6.50 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து திங்கள்கிழமை (ஜன.27) இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07170) மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு காச்சிக்கூடா சென்றடையும்.
இந்த ரயில் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.