இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: போலீஸ் விசாரனை
கூடலூரை அடுத்த தேவா்சோலை பகுதியில் யானை தாக்கி இளைஞா் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படவில்லை என்று வனத் துறை கூறியதால், உயிரிழப்பில் மா்மம் இருப்பதாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கூடலூா் வட்டம், தேவா்சோலை 3-ஆவது பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் வாப்புட்டி (எ) ஜம்ஷீத் (37). இவா் இரவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலைக் கொண்டு சென்றுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் சனிக்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அதில் யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தனா். இதனால் இளைஞா் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாக கூறி தேவா்சோலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.