Republic Day: காவல்துறை அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள்... நெல்லையில் குடியரசு தின ...
நீலகிரியில் இன்று நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம்
: நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள், குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.
நகராட்சிகள், பேருராட்சிகள், உள்ளாட்சித் துறைகள், வனத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய பசுமை காவலா்கள் ஆகியோா் இணைந்து இந்த முகாமை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.