இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
அரசுக் கல்லூரி முதல்வரைக் கண்டித்து பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களை கல்லூரி பெண் முதல்வா் ஒருமையில் பேசுவதைக் கண்டித்து பேராசிரியா்கள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகை அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக இருப்பவா் ராமலட்சுமி. இவா் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலப் பணியாளா்களை தொடா்ந்து ஒருமையில் பேசி வருவதாகக் கூறி
முதல்வரின் இந்த செயலைக் கண்டிக்கும் வகையில் கல்லூரியில் பணியாற்றும் பேராசியா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஒன்று திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது கல்லூரி முதல்வா் மீது, தமிழக உயா் கல்வி இயக்குநா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.