இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
சாலையோர சிறு வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்
கூடலூரில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நகரில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு நடைபாதை கடைகளும், வாகன நிறுத்தமும்தான் காரணம் என்று கூறி சாலையோரக் கடைகளை அகற்ற போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதில் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன. பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையோர சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடைகள் அகற்றப்பட்டதால் பாதிப்படைந்த நடைபாதை வியாபாரிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை நம்பியுள்ள தங்களுக்கு வியாபாரம் செய்ய வேறு இடம் வழங் வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினா். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனா்.