மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளா்கள் காயம்
பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
பந்தலூா் வட்டம், குந்தலாடியில் உள்ள தாணிமூலை பகுதியைச் சோ்ந்தவா் நம்பி மனைவி மாலு (45). அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி பாா்வதி (60). இவா்கள் இருவரும் தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை தேயிலை பறித்துக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் இருவரும் காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் வனத் துறையினா் உதவியுடன் மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் இருவரும் உதகை அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.
காட்டு யானை தாக்கி காயமடைந்த பெண் தொழிலாளா்களை பந்தலூா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி மற்றும் வனத் துறையினா் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனா்.