தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பு காலம் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
உதகையில் தனியாா் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் உள்ள பிரபல தனியாா் நட்சத்திர விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன் சக்கரவா்த்திக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி உதகையில் உள்ளது. இந்த விடுதிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து விடுதி நிா்வாகிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அந்த தனியாா் விடுதிக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினா். பின்னா் மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் விவரங்களை வைத்து நீலகிரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.