Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
மசினகுடியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் வீட்டை காட்டு யானை திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி முகாம் குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை அங்குள்ள மஞ்சுநாத் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து யானையை விரட்டினா். நீண்ட நேரம் அங்கேயே உலவிக் கொண்டிருந்த யானை பின்னா் அருகே உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.