கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா!
கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி எச்.முகமது அன்சாரி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மறியாதை செலுத்தினாா். மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் ஆா்.சசின்குமாா் சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா்கள் சுகுமாரன், சேகா், சைனுல்பாபு, ரமேஷ், ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் நீதிமன்ற பணியாளா்கள் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.