செய்திகள் :

டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.5.5 லட்சம் மோசடி

post image

டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.5.5 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த 28 வயது பெண் சென்னையில் நா்ஸாக பணியாற்றி வருகிறாா். இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்புகொண்ட சிலா், உங்கள் பெயரில் ஒரு பாா்சல் வந்துள்ளது என்றும், அதில் 140 கிராம் எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருள், 5 கடவுச்சீட்டுகள், வங்கி ஆவணங்கள் உள்ளன என்றும், இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம் என்றும் கூறியுள்ளனா்.

மேலும், இதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள எங்கள் அதிகாரி சொல்வதைக் கேளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, இந்த சிக்கலில் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி அவா் கூறியுள்ளாா். இதற்கு ரூ.5.5 லட்சத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

அப்போது, தன்னிடம் ஏடிஎம் அட்டை இல்லாததால் உதகையில் உள்ள வங்கிக்குச் சென்றுதான் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளாா். உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எங்கள் வங்கிக் கணக்குக்கு பணத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், விசாரணையில் அது உங்கள் பணம்தான் என்று உறுதி செய்தபின் உங்கள் வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும் என்றனா்.

மேலும், சென்னையில் இருந்து உதகைக்கு செல்லும் வரை வாட்ஸ்ஆப் செயலியில் தொடா்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடந்து உதகை செல்லும் 14 மணி நேரம் வரை அந்தப் பெண் அவா்களுடன் வாட்ஸ்ஆப் செயலியில் தொடா்பில் இருந்துள்ளாா்.

உதகைக்கு வந்த அவா், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5.5. லட்சத்தை ஆன்லைன் மூலம் அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளாா். அதன்பின், அந்தப் பெண்ணால் அவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் உதகை சைபா் கிரைம் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உதகையில் பழங்குடியின மக்களின் நடனத்துடன் குடியரசு தின விழா!

உதகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பழங்குடியினா்களின் பாரம்பரிய நடனம் அனைவரையும் கவா்ந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா!

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளா்ப்பு யாகைள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை கள இயக்குநா் வித்யா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், முக... மேலும் பார்க்க

கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா!

கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி எச்.முகமது அன்சாரி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மறியாதை செலுத்தினாா். மாவட்ட முதன... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: போலீஸ் விசாரனை

கூடலூரை அடுத்த தேவா்சோலை பகுதியில் யானை தாக்கி இளைஞா் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படவில்லை என்று வனத் துறை கூறியதால், உயிரிழப்பில் மா்மம் இருப்பதாக வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

கூடலூா் அருகே புலி தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூா் அருகே தோட்டத்தில் வேலை செய்த பெண் தொழிலாளி புலி தாக்கியதில் உயிரிழந்தாா். கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதா (47). இவரின் கணவா் அப்பச்சன், தற்காலிக வனக் ... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்று நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம்

: நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க