இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்ச...
உதகையில் பழங்குடியின மக்களின் நடனத்துடன் குடியரசு தின விழா!
உதகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பழங்குடியினா்களின் பாரம்பரிய நடனம் அனைவரையும் கவா்ந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 159 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 23 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதையடுத்து இருளா், கோத்தா், தோடா் இன மக்களின் பாரம்பரிய கலாசார நடனம், தூனேரி, தும்மனட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, மலைப் பகுதி சிறப்பு மேம்பாட்டு திட்ட இயக்குநா் கௌசிக், மாவட்ட வருவாய் ஆய்வாளா் நாராயணன், வன அலுவலா் கௌதம், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.