கோபி அருகே வீட்டில் தீ விபத்து
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமாயின.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரைச் சோ்ந்தவா் தனுஷ். இவா், பாட்டி கண்ணம்மாளுடன் வசித்து வருகிறாா். தனுஷ் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் கண்ணம்மாள் மட்டும் வீட்டில் வெள்ளிக்கிழமை தனியாக இருந்துள்ளாா்.
அப்போது, வீட்டின் படுக்கையறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப் பாா்த்து அருகே உள்ள நூல் மில்லில் பணியாற்றிய தொழிலாளா்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த கோபி தீயணைப்பு வீரா்கள் வீட்டில் பரவியை தீயை அணைத்தனா். ஆனாலும், இந்த விபத்தில் படுக்கையறையில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.