`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
வில்லுக்குறியில் ஐஓபி கிளை திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) 53ஆவது கிளை தக்கலை அருகேயுள்ள வில்லுக்குறியில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இதையொட்டி, வில்லுக்குறியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா. .அழகுமீனா பங்கேற்று, ஐஓபின் புதிய கிளையை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
விவசாயிகள், மீனவா்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடனுதவிகள் வழங்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தனியாா் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அவதிப்படுவதை தவிா்த்து அரசு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் வரபிரசாத், முதன்மை மேலாளா்கள் சண்முக சுந்தர பாண்டியன், சரவணகுமாா் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், ஆகியோா் கலந்து கொண்டனா்.