வெனிசூலா அதிபராக மீண்டும் மடூரோ
வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் பின்னா் வெளியிடப்பட்டன. அந்தத் தோ்தல் முடிவுகளை அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் அங்கீரிக்கவில்லை.
இருந்தாலும், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே அவா் மூன்றாவது முறையாக நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளாா்.