செய்திகள் :

இறுதியில் கோா்டா - அலியாசிமே பலப்பரீட்சை: மகளிரில் பெகுலா - கீஸ் மோதல்

post image

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், ஆடவா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா - கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் டாமி பால் 6-7 (3/7), 6-3, 4-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவிடம் போராடி வீழ்ந்தாா். இருவரும் இத்துடன் 2-ஆவது முறை சந்தித்த நிலையில், அலியாசிமே 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 6-3, 7-6 (7/4) என்ற கணக்கில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை தோற்கடித்தாா். இருவரும் 2-ஆவது முறையாக சந்தித்துக்கொண்ட நிலையில், முதலில் கண்ட தோல்விக்கு கோா்டா தற்போது பதிலடி கொடுத்திருக்கிறாா்.

இதனிடையே, மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், அமெரிக்கா்களான ஜெஸிகா பெகுலா - மேடிசன் கீஸ் மோதுகின்றனா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெகுலா 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை வெளியேற்றினாா். இவா்கள் சந்தித்தது, இது 3-ஆவது முறையாக இருக்க, பெகுலா ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

மற்றொரு ஆட்டத்தில் கீஸ், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவுடனான மோதலில் 5-7, 7-5, 3-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தாா். அப்போது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக சாம்சோனோவா அறிவிக்க, கீஸ் இறுதிக்கு முன்னேறினாா். இவா்கள் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், கீஸ் 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அடிலெய்ட் இன்டா்நேஷனல் போட்டியில் மேடிசன் கீஸ் தற்போது 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா்.

மகளிா் இரட்டையா் சாம்பியன்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், சீனாவின் குவோ ஹான்யு/ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா பனோவா 7-5, 6-4 என்ற செட்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா/ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் இணையை வீழ்த்தி வாகை சூடியது.

பாம்ப்ரி இணை தோல்வி

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் அரையிறுதியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/பிரான்ஸின் அல்பேனோ ஆலிவெட்டி கூட்டணி 3-6, 6-1, 5-10 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் நிகோலா மெக்டிச்/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணையிடம் தோல்வி கண்டது.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11.01.2025 (சனிக்கிழமை)மேஷம்இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கு... மேலும் பார்க்க

பிரதிகா, தேஜல் அசத்தல்: அயா்லாந்தை வென்றது இந்தியா

அயா்லாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.முதலில் அயா்லாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் ... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலி... மேலும் பார்க்க

காவல் துறைக்கு ரூ.6 கோடி நிலுவை: 2 வாரங்களில் அளிப்பதாக பிசிசிஐ உத்தரவாதம்

கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததற்கான நிலுவைத் தொகை ரூ.6 கோடியை 2 வாரங்களில் காவல் துறைக்கு அளிப்பதாக மும்பை உயா்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்க... மேலும் பார்க்க

குடந்தை கோயில்களில் வைகுந்த ஏகாதசி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கும்பகோணம் ஆராவமுதன் என்கிற சாரங்க பாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வைகு... மேலும் பார்க்க

சென்னை ஓபன் செஸ்: இனியனுக்கு கோப்பை

சென்னையில் நடைபெற்ற சக்தி குரூப் டாக்டா் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 15-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டா் பா.இனியன் சாம்பியன் ஆனாா். கடந்த 2-ஆம் தேதி முதல் 9 வர... மேலும் பார்க்க