செய்திகள் :

Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்?

post image

முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத்துக்கு செய்யும் மசாஜ்களைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா லட்சுமண்.

beauty tips

''மசாஜ் செய்வதற்கு விரல் நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும். மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு, காய்ச்சாதப் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாகத் துடைத்துவிடுங்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பிறகு முகத்துக்கு 15 நிமிடங்களும், கழுத்துப் பகுதிக்கு 5 நிமிடங்களும் மசாஜ் செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு நாள்கள் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கொள்ளவேண்டும்.

கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற நன்கு கனிந்த பழங்கள், தக்காளி, வெள்ளரி, கோஸ், கேரட் போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்றின் மசியல். நல்லெண்ணெய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய், இளநீர், 2 துளி தேன், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.

காய்ச்சாத பால் அல்லது தேங்காய்ப் பால் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு மசாஜ் செய்தால் அவை பளிங்கு மாதிரியாகும். இதை 'தெரபிஸ்ட் மசாஜ்’ என்று சொல்லுவோம்.

மசாஜ் செய்கிறபோது கைகளை அவ்வப்போது ஆரஞ்சுச் சாற்றில் நனைத்துக்கொண்டு செய்யலாம். மசாஜ் செய்யும்போது, எப்போதுமே கீழிருந்து மேல்நோக்கித்தான் செய்யவேண்டும். மேலிருந்து கீழ் நோக்கிச் செய்தால் சதைப் பகுதி தொங்கிவிடும். ஜாக்கிரதை!'' என்கிற ஹேமா, மசாஜ் செய்யும் முறைகளையும் விளக்கினார்.

அழகுக்கு அழகு!

நெற்றி: சிலருக்கு நெற்றியில் வரிகள் தோன்றுவது, சருமம் இறுகுவதால்தான். நெற்றிக்கு மேல் வகிட்டில் இருந்து இரண்டு பக்கமும் அரை வட்டமாகத் தைலம் தடவுவது போல் மசாஜ் செய்யுங்கள். இதனால், நெற்றியில் உள்ள 'வரி’கள் காணாமல் போகும்.

புருவம்: இரு புருவங்களையும் தேங்காய் எண்ணெயால் கட்டை விரல், ஆள்காட்டி விரலால் நன்றாக நீவிவிட வேண்டும். இதனால் புருவம் 'வில்’ போன்று நன்றாக வளரும்.

கண்கள்: இரு புருவங்களுக்கு நடுவில் மூக்குப் பகுதியில் இருந்து கண்ணைச் சுற்றி மசாஜ் செய்வதை மைண்ட் மசாஜ் என்போம். மிகவும் கவனத்துடன் இந்த மசாஜை செய்தால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து முகம் பளிச்சென மாறும்.

கன்னம்: சிலருக்கு முகத்தில் சதைப்பற்றே இல்லாமல் ஒட்டி இருக்கும். பழங்களால் மசாஜ் செய்வதன் மூலம் கன்னங்கள் பொலிவு பெறும். காய்கறிகளை நன்றாகக் கடித்துத் தின்னும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருவித மசாஜ்தான். கன்னத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சதைப்பற்றுக் கூடும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Hair Care: முடி வறட்சி முதல் முடி உதிர்வு வரை... வராமல் தடுக்கலாம்; வழி என்னென்ன?

அழகான கூந்தல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். அதில் வரக்கூடிய சில அடிப்படை பிரச்னைகளுக்காக தீர்வுகளைச் சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.healthy hairபொடுகுத் தொல்லையிலிருந்து வி... மேலும் பார்க்க

Nail polish: டார்க் கலர் நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க?

நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல் டிரெண்ட். நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக எப்படிப் பராமரிப்பது? அழகுக்கல... மேலும் பார்க்க

Health & Beauty: காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..!

சரும பராமரிப்பு என்பது சருமத்தை வெள்ளை வெளேரென்று மாற்றுவது கிடையாது. உங்களுடைய ஒரிஜினலான நிறத்தை பிளாக் ஹெட், ஒயிட் ஹெட், டெட் செல் என எந்த மாசு மருவும் இல்லாமல், ரோஜாவின் ஒற்றை இதழ்போல மென்மையாக வெள... மேலும் பார்க்க