5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள...
திருமாவளவனின் உழைப்புக்கான அங்கீகாரம்: முதல்வர் பாராட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது திருமாவளவனின் உழைப்புக்கான அங்கீகாரம் என திமுக தலைவரும் முதலவருமான மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது திருமாவளவனின் உழைப்புக்கான அங்கீகாரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்க |ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு
இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்.” என கூறியுள்ளார்.