நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நிறுவிய நவீன வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அம்மாவட்டத்தின், நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காட்டுப்பகுதியில் இன்று (ஜன.11) காலை மத்திய ரிசர்வ் காவல் படையின் 196 வது பட்டாலியனின் பிரிவின் மஹாதேவ் காட் படையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது நக்சல்கள் பொருத்தி வைத்திருந்த ஐ.ஈ.டி எனப்படும் நவீன வெடிகுண்டு வெடித்தது. இதில், அப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதையும் படிக்க: குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை
இதனைத் தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டு பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக, கடந்த ஜன.6 அன்று அம்மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.