செய்திகள் :

சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி: ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு!

post image

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் இன்று (ஜன.11) களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் ஸ்மித் சதமடித்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222/3 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய பெர்த் ஸ்கார்செர்ஸ் 20 ஓவர்களில் 206/7 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஸ்டன் ஏகர் 66 ரன்களும் சாம் ஃபேனிக் 41 ரன்களும் எடுத்தார்கள்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி சார்பில் ஷான் அப்பாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். டவார்ஷீஸ், கெர், ஹென்ரிக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

121* ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 8 இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 3 பிபிஎல் சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்ட... மேலும் பார்க்க

கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இடையேயான கூட்டம் இன்று (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.வங்கதேச அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த தமிம் இக்பால், அந்த அணிக்காக அனைத்து வடி... மேலும் பார்க்க

40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?

தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜேஎஸ்கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான ஃபாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் ஃபிட்டாக இருக்கிறார். பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். தென்னாப்பி... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையா... மேலும் பார்க்க

அதிரடியாக சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிபிஎல் தொடரில் புதிய சாதனை!

பிபிஎல் (பிக் பேஷ் லீக்) டி20 தொடரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல... மேலும் பார்க்க