செய்திகள் :

அதிரடியாக சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிபிஎல் தொடரில் புதிய சாதனை!

post image

பிபிஎல் (பிக் பேஷ் லீக்) டி20 தொடரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் விளையாடுகிறார்.

இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டன் ஹெண்டிரிக்ஸ் 46 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222/3 ரன்கள் குவித்துள்ளது.

பெர்த் ஸ்கார்சஸ் சார்பில் கூப்பர் கோன்னஹ்லி, அஸ்டன் ஏகர், ஜேசன் பெஹரண்ட்ராஃப் தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

பிபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் (3 சதங்கள்) பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் பென் மெக்டொர்மெட் (96 இன்னிங்ஸில்) உடன் சமன் செய்துள்ளார்.

ஆனால், மிகவும் குறைந்த இன்னிங்ஸில் (32) ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையா... மேலும் பார்க்க

சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி: ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு!

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் இன்று (ஜன.11) களமிற... மேலும் பார்க்க

பிஜிடி தொடரில் காயத்துடன் விளையாடிய லயன்..! இலங்கை தொடரில் விளையாடுவாரா?

பிஜிடியின் முதல் தொடரிலிருந்து காயத்திலிருந்ததாக நாதல் லயன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கை தொடரில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார். நாதன் லயன் 134 டெஸ்ட் போட்டிகளில் 539 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான் எனக் கூறியுள்ளார்.ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையை வென்றாலும் பாட் கம்ம... மேலும் பார்க்க

இலங்கை தொடரில் மீட்சி அடைவேன் : மெக்ஸ்வீனி

இலங்கை டெஸ்ட் தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன் என ஆஸி. இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் அறிமுகமான இளம் ஆஸி. வீரர் நாதன் மெக்ஸ்வீனி 4ஆவது போட்டியில் இருந்து... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது: பிரதீகா ராவல்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்ட... மேலும் பார்க்க