செய்திகள் :

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன?

post image

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள டாக்டர். அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் வாசகர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்படி வெளியான முக்கியமான புத்தகங்களில் சில...

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்

தமிழில் பாபாசாகேப் அம்பேத்கரை‌ப் பற்றிய முழுமையான தொகுப்பை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். டாக்டர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு உட்பட அவரைப் பற்றி இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர், கலைஞர்கள் என எல்லாருடைய பதிவுகளையும் உள்ளடக்கிய புத்தகமாகவும், இதுவரை அம்பேத்கரைப் பற்றி அறிந்திடாத தகவல்களைக் கொண்ட கருவூலமாகவும் வெளிவந்துள்ளது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'.

இந்து மதத் தத்துவம்

இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்

இந்துமதத்தையும், அதன் தத்துவத்தையும் பற்றிய விரிவான அலசலைக் கொடுக்கிறது இப்புத்தகம். இதனை ரிதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அம்பேத்கர் முகவுரை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இரகசிய வரலாறு

அம்பேத்கர் முகவுரை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இரகசிய வரலாறு.
அம்பேத்கர் முகவுரை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இரகசிய வரலாறு.

இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் முகவுரையின் மூலம் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார் என்பதையும், அதனை அமைக்க அவர் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார் என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. இந்நூலின் ஆசிரியர் ஆகாஷ் ரத்தோர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதனை ச.வின்சென்ட் தமிழாக்கம் செய்துள்ளார். எதிர் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்

தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்
தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்

கடந்த கால வரலாறு கலை அரசியல் பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு நமக்கு ஆவணங்களாக இருப்பது இதழ்களே. அப்படியான வரலாற்றை டாக்டர் அம்பேத்கர் அவர்களை மையமாக வைத்து இதழியல் வரலாற்றை எழுதியுள்ளார் ஜெ. பாலசுப்ரமணியம். 'தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்' எனும் நூலில் அம்பேத்கரின் இதழியல் பணிகளையும், 1930க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்கிய உரிமை, உதயசூரியன், தொண்டு, விடுதலை முரசு ஆகிய இதழ்களைப் பற்றியும் விவரித்து எழுதியுள்ளார்.

பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்

பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்
பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்

"ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தப்படாமல் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் பல்வேறு வளர்ச்சிகளை மக்களிடையே கொண்டு வருகிற அரசியலமைப்பு முறையாகும்" என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர். ஜனநாயகத்துக்காக இறுதி வரை போராடி, அது குறித்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர் அம்பேத்கர். அப்படி அவர் பேசியவற்றில் 10 உரைகளைத் தொகுத்து, 'பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்' என்ற நூலினை நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை முனைவர் க. ஜெயபாலன் மற்றும் முனைவர் பெ. விஜயக்குமார் ஆகியோரும் தொகுத்துள்ளனர்.

கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும்

கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும்
கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும்

மனித சமூகம் பண்பாட்டு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்ந்து கொண்டே வந்தாலும் இந்தியாவின் தீரா நோயான ‌ சாதி மாறி வரும் சமூக மாற்றத்தின் ஊடே தன்னைப் பரிணமித்து நிலைத்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சாதி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கிய மைல்கல் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையைப் பெற்றுத் தந்தது. அதற்கு வழிகோலியது ஆலய நுழைவு போராட்டங்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் காந்தி போன்ற தலைவர்களால் முன்னேடுக்கபட்ட போராட்டங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு 'கோவில் நுழைவு போராட்டம் ஆவணங்களும் கட்டுரைகளும் '. இதனை எஸ்.பூபதிராஜ் மற்றும் பா. அமுதரசன் ஆகியோர் தொகுத்துள்ளனர்.

Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாதனின் பரிந்துரை என்ன?

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் ."எங்களைப் போன்ற புதிய எழுத்தா... மேலும் பார்க்க

Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வரைந்த சிறுமி

தன் படைப்புகள் மூலம் உழைக்கும் மக்களின் அரசியலையும் வாழ்வியலையும் பேசி வரும் முக்கியமான எழுத்தாளர் அழகிய பெரியவன். பல விருதுகளைப் பெற்ற அவரின் தீட்டு, குறி உள்ளிட்ட 6 கதைகளைத் தொகுத்து 'அழகிய பெரியவன்... மேலும் பார்க்க

Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துரைகள் என்னென்ன?

திராவிட இயக்கமும் வேளாளரும், வ.உ.சி.: வாராது வந்த மாமணி, பாரதி ‘விஜயா’ கட்டுரைகள், அந்தக் காலத்தில் காப்பி இல்லை, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை போன்ற படைப்புகளைக் கொடுத்த எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலப... மேலும் பார்க்க

Book Fair: "எழுத்து ஒரு தவம்; அதை நேசித்து வாசித்தால்..." - ஷோபா சக்தியின் பரிந்துரைகள் என்னென்ன?

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளுமைகளைச் சந்தித்து அவர்களின் பரிந்துரைகள், கடந்த ஆண்டு படித்த முக்கிய படைப்புகள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறோம். அந்த வகையி... மேலும் பார்க்க

Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது" - விக்கிரமாதித்தன்

தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவிஞர் விக்கிரமாதித்தன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்துப் பேசினோம்."கோட்டை முதல் ஊராட்சி வரை தமிழ் வாழ்க என்று ... மேலும் பார்க்க

Book Fair: "திருநர்களைப் பற்றி நாங்களே சொல்லத்தான் 'திருநங்கை ப்ரெஸ்'" - கிரேஸ் பானு

சாதி, மத பேதங்களைப் போல் இந்த நாட்டில் பாலின பேதங்களும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த பாலினப் பேதங்களால் பெண்களைப் போல, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவது திருநர் சமூகத்தின... மேலும் பார்க்க