செய்திகள் :

Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாதனின் பரிந்துரை என்ன?

post image

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் .

"எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கும், எழுத வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் மிகப்பெரிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பல்வேறு படைப்புலக மேதைகளை நேரில் காணவும், ஆலோசனைகளைப் பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்று கூறினார்.

அவரின் படைப்புகள் குறித்துக் கேட்டதற்கு, அவரின் முதல் சிறுகதை தொகுப்பான மழைக்கண் பரவலான கவனத்தை ஈர்த்ததாகவும், 'கதைகளில் பேசும் குழந்தைகள்' என்ற குழந்தைகள் நூல் வயது வித்தியாசம் இல்லாமல் வாசகர்களைச் சென்றடைந்ததாகவும் கூறினார்.

செந்தில் ஜெகன்நாதன்
செந்தில் ஜெகன்நாதன்

தாம் நேசிக்கும் எழுத்தாளர்கள் முன்னிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிட்ட அவரின் படைப்பான 'அனாகத நாதம்' கண்டிப்பாக வாசகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் பேசினார்.

கடந்த ஆண்டில் படித்துப் பிரமித்த நூல்கள் குறித்துக் கேட்டோம். அவ்வை டி.கே சண்முகம் எழுதிய 'எனது நாடக வாழ்க்கை', டென்சுலா ஆவ் என்ற அஸ்ஸாமிய பெண் எழுத்தாளர் எழுதிய 'என் தலைக்கு மேல் சரக்கொன்றை' என்ற சிறுகதை நூல், எட்கர் கீரத் என்ற இஸ்ரேல் எழுத்தாளரின் 'அவன் பறந்து போய் விட்டான்' ( மொழிபெயர்ப்பு சிறுகதை நூல்), எஸ். முத்தையா எழுதிய 'சென்னை மறு கண்டுபிடிப்பு', 'சிப்பியின் வயிற்றில் முத்து' என்ற மொழிபெயர்ப்பு நாவல் போன்றவற்றை தெரிவித்தார்.

தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் என்னென்ன என்று கேட்டோம் . தயக்கமே இல்லாமல் சட்டெனக் கூறினார்.

செந்தில் ஜெகன்நாதன்
செந்தில் ஜெகன்நாதன்

எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதா விலாசம்', ஜா.தீபா எழுதிய 'மேதைகளின் குரல்கள்', கவிஞர் மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு நூலான 'பாயக் காத்திருக்கும் ஓநாய்' என்ற அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள், கிளாசிக் நாவல் வகையில் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'மணல் கடிகை', தியோடர் பாஸ்கரன் எழுதிய 'கல் மேல் நடந்த காலம்' மற்றும் என். ஸ்ரீராம் எழுதிய 'இரவோடி' என்ற நாவல் ஆகிய நூல்களைக் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன் என்றார்.

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன?

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள டாக்டர். அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் வாசகர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்... மேலும் பார்க்க

Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வரைந்த சிறுமி

தன் படைப்புகள் மூலம் உழைக்கும் மக்களின் அரசியலையும் வாழ்வியலையும் பேசி வரும் முக்கியமான எழுத்தாளர் அழகிய பெரியவன். பல விருதுகளைப் பெற்ற அவரின் தீட்டு, குறி உள்ளிட்ட 6 கதைகளைத் தொகுத்து 'அழகிய பெரியவன்... மேலும் பார்க்க

Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துரைகள் என்னென்ன?

திராவிட இயக்கமும் வேளாளரும், வ.உ.சி.: வாராது வந்த மாமணி, பாரதி ‘விஜயா’ கட்டுரைகள், அந்தக் காலத்தில் காப்பி இல்லை, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை போன்ற படைப்புகளைக் கொடுத்த எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலப... மேலும் பார்க்க

Book Fair: "எழுத்து ஒரு தவம்; அதை நேசித்து வாசித்தால்..." - ஷோபா சக்தியின் பரிந்துரைகள் என்னென்ன?

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளுமைகளைச் சந்தித்து அவர்களின் பரிந்துரைகள், கடந்த ஆண்டு படித்த முக்கிய படைப்புகள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறோம். அந்த வகையி... மேலும் பார்க்க

Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது" - விக்கிரமாதித்தன்

தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவிஞர் விக்கிரமாதித்தன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்துப் பேசினோம்."கோட்டை முதல் ஊராட்சி வரை தமிழ் வாழ்க என்று ... மேலும் பார்க்க

Book Fair: "திருநர்களைப் பற்றி நாங்களே சொல்லத்தான் 'திருநங்கை ப்ரெஸ்'" - கிரேஸ் பானு

சாதி, மத பேதங்களைப் போல் இந்த நாட்டில் பாலின பேதங்களும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த பாலினப் பேதங்களால் பெண்களைப் போல, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவது திருநர் சமூகத்தின... மேலும் பார்க்க