செய்திகள் :

காணும் பொங்கல்: சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு

post image

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mini Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வி.சி.சந்திரகுமார்

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 Al Terrah Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர். சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) 85 காவல் அதிகாரிகள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரு... மேலும் பார்க்க

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! மதுரை காவல் அதிகாரி கைது!

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிறப்பு காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி கைது செய்யப்பட்டார்.மதுரையில் திருக்கார்த்திகை (டிச. 13) விழாவின்போது, திருப்பரங்குன்றத்துக்கு சென்ற 14 வயது சிறுமி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு - இபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

மக்களை திமுக ஏமாற்றுவது விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா?- ஓ.பன்னீர்செல்வம்

மக்களை திமுக ஏமாற்றுவது விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்... மேலும் பார்க்க