பிஜிடி தொடரில் காயத்துடன் விளையாடிய லயன்..! இலங்கை தொடரில் விளையாடுவாரா?
பிஜிடியின் முதல் தொடரிலிருந்து காயத்திலிருந்ததாக நாதல் லயன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கை தொடரில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.
நாதன் லயன் 134 டெஸ்ட் போட்டிகளில் 539 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 24 முறை 5 விக்கெட்டுகளையும் 5 முறை 10 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார். 2016இல் லயன் கொழும்புவில் 87 ஓவர்கள் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
16 பேர்கொண்ட ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் யு-19 ஆஸி. உலகக் கோப்பை கேப்டன் கூப்பர் கோன்னொலி, நாதன் மெக்ஸ்வீனி, குன்னஹ்மேன், டாட் மர்பியும் இருக்கிறார்கள்.
மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வாக வாய்ப்பிருந்தும் தேர்வாகவில்லை. ஏற்கனவே 63.73சதவிகித புள்ளிகளைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஆஸி. தகுதிபெற்றுவிட்டது.
ஜூன் 11ஆம் தேதி லார்ட் மைதானத்தில் தெ.ஆ. உடன் இறுதிப் போட்டியில் ஆஸி. மோதவிருக்கிறது. 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் இலங்கை உடன் ஆஸி. 2 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
இது குறித்து நாதன் லயன் கூறியதாவது:
எனக்கு விளக்கம் கூற கடினமாக இருக்கிறது. மருத்துவ பெயர்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. எனது இடுப்பில் உடல் உறுப்புகளை இணைக்கும் திரவம் அதிகமாக இருப்பதால் எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. எனக்கு முதல் டெஸ்ட்டிலிருந்தே இது இருக்கிறது. ஆனாலும், அது என்னை பந்துவீசுவதில் இருந்து தடுக்கவில்லை. நான் பந்துவீசும்போது இடுப்பு வலிக்கிறது. தற்போது பரவாயில்லாமல் இருக்கிறது.
போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்தேன். எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன். மற்ற எதையும் தொடர்பு கொள்ளவில்லை. இலங்கை தொடரில் நான் 100 சதவிகிதம் உடல்நலத்துடன் இருப்பேன்.
முதலில் அது சுழல்பந்துக்கான சாதகமான களமென நினைத்தேன். 2022இல் தினேஷ் சண்டிமல் 206 ரன்கள் எடுத்த ஆடுகளம்போல் இருந்தது. 5 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவார்கள் என்பது சந்தேகமே என்றார்.
முதல் டெஸ்ட்டு ஜன.29- பிப்.2வரையும் பிப்.6 -பிப்.10.வரை இரண்டாவது டெஸ்ட்டும் காலே மைதானத்தில் விளையாடுகிறது.