எல்லா கடை கடிகாரத்திலும் 10:10 என நேரம் காட்டுவது ஏன்? | My Vikatan
கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?
இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்டோனியோ டார்சியா, உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கு நோய்வாய்ப்படுவதற்கு தடை விதித்துள்ளார்.
இது சட்ட அதிகாரப்பூர்வ தடையில்லை என்றும் அக்கிராமத்திலுள்ள சுகாதாரம் மற்றும் மருத்துவப் பற்றாக்குறையின் மீது கவனம் பெறுவதற்காகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான பெல்காஸ்ட்ரோ கிராமத்தில் 1,300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் பெரும்பாலான இளையத் தலைமுறையினர் வேலைத் தேடி நகரங்களுக்கு சென்றுவிட்டதினால் முதியவர்கள் மட்டுமே அங்கு அதிக அளவில் காணப்படுகின்றனர்.
இதையும் படிக்க:அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி!
அந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு மருத்துவமனையும் மூடப்பட்டதினால் கிராமத்துவாசிகளின் அவசர மருத்துவத் தேவைகளுக்கு சுமார் 45 கி.மீ தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
அக்கிராமத்தின் மேயர் பிறப்பித்துள்ள ஆணையில் பெல்காஸ்ட்ரோ மக்கள் பயணம் செய்வது, விளையாட்டு மற்றும் சாகசங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமல் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிக்கும் வசதி அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தடைக்குறித்து மேயர் அண்டோனியோ டார்சியா கூறுகையில், இது அந்த கிராமத்தின் முக்கிய பிரச்சனையின் மீது கவனம் பெறுவதற்காக விளையாட்டாக விதிக்கப்பட்ட தடை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளிப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்து தங்கி கிராமவாசிகளின் அவதிகளைக் குறித்த புரிதலை உண்டாக்கிக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த கிராமத்தின் மருத்துவமனை மீண்டும் செயல்படும் வரையில் இந்த தடையானது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.