முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வி.சி.சந்திரகுமார்
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
இதனிடையே ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என கூறியிருந்தார்.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?
இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.