செய்திகள் :

சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!

post image

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த தமிம் இக்பால், அந்த அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 387 போட்டிகளில் விளையாடியுள்ளார். வங்கதேச அணிக்காக அவர் 15,192 ரன்கள் குவித்துள்ளார். முஷ்ஃபிகர் ரஹிமுக்கு அடுத்தபடியாக, வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை இவரையே சேரும்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

ஓய்வு முடிவு குறித்து தமிம் இக்பால் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நான் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாள்களாக விளையாடவில்லை. அது அப்படியே தொடரப் போகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் எனது அத்தியாயம் முடிந்துவிட்டது. எனது ஓய்வு முடிவு குறித்து நீண்ட காலமாக யோசித்து வந்தேன். சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப் பெரிய தொடர்கள் வரவிருக்கின்றன.

யாருடைய கவனத்தையும் சிதறடிக்க நான் விரும்பவில்லை, என்னைப் பற்றி யோசிக்கும் நேரத்தில் வங்கதேச அணி அதன் கவனத்தை சிதறவிட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு நடைபெறுவதை நான் விரும்பவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, என்னை அணியில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டார். அணித் தேர்வுக்குழுவிலும் இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது. அணியில் நான் இடம்பெற வேண்டும் என்ற அவர்களது எண்ணத்திற்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இருப்பினும், என்னுடைய மனது கூறுவதைக் கேட்டு நடக்க விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?

35 வயதாகும் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,134 ரன்கள் குவித்துள்ளார். 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,357 ரன்களும், 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களும் குவித்துள்ளார்.

அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த தமிம் இக்பால், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து மகளிரணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்ட... மேலும் பார்க்க

கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இடையேயான கூட்டம் இன்று (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்... மேலும் பார்க்க

40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?

தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜேஎஸ்கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான ஃபாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் ஃபிட்டாக இருக்கிறார். பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். தென்னாப்பி... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையா... மேலும் பார்க்க

சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி: ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு!

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் இன்று (ஜன.11) களமிற... மேலும் பார்க்க