பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!
நண்பர்களுக்கு வீடியோ காட்டிய காதலன்; 5 ஆண்டுகளில் மாணவியை வன்கொடுமை செய்த 62 பேர் - கேரளா அதிர்ச்சி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பான குடும்பஸ்ரீ அமைப்பின் சினேகித ஜென்டர் ஹெல்ப் டெஸ்க் மூலம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
தடகள வீராங்கனையான அந்த மாணவி, 13 வயது முதலே தனக்கு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் கோனி நிர்பயா சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டு சைக்காலஜிஸ்ட் மூலம் கவுன்சலிங் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைக்காலஜிஸ்டிடம் விவரித்துள்ளார். இலவும்திட்ட காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி தன்னை காதலன் உள்ப்பட 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி அளித்த பட்டியலில் 6 காவல் நிலைய எல்லைகளுக்குட்ப்பட்ட 64 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 34 பேரின் பெயர்களை மாணவி எழுதிக்கொடுத்துள்ளார். மேலும் 30 பேரின் மொபைல் எண்களையும் மாணவி தெரிவித்துள்ளார். 64 பேர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுபின்(24), சந்தீப்(30), வி.கே.வினீத்(30), கே.அனந்து(21), சுதி(24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுதி என்பவர் போக்ஸோ வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மாணவியின் காதலன் திருமணம் செய்வதாக கூறி மாணவியை முதலில் வன்கொடுமை செய்துள்ளான். மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு காட்டியுள்ளான் காதலன். பின்னர் அவனது நண்பர்களும் மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். 2019-ம் ஆண்டு முதல் மாணவிக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs