செய்திகள் :

Pawan Kalyan: ``பெண்களை அவமதிப்பது ஆண்மை ஆகாது" -ஈவ் டீசிங் செய்பவர்களை எச்சரித்த பவன் கல்யாண்

post image

ஆந்திரபிரதேசம் மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பெண்களை ஈவ் டீசிங் செய்பவர்கள் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது தொகுதியான பிதாபுரத்தில் உள்ள பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெண்களை அவமரியாதையாக நடத்துவதை ஆண்மை என நினைப்பவர்களை கண்டித்த பவன் கல்யாண், சமூகத்தில் பெண்களின் அடிப்படை பங்களிப்பு குறித்தும் சுட்டிக்காட்டினார்.

Women Safety

"ஒரு பெண்ணுக்கு கஷ்டம் கொடுப்பது உன்னை ஆண்மகனாக ஆக்காது. நீ உன் ஆண்மையை நிரூபிக்க விரும்பினால் ஜிம்மாஸ்டிக்ஸ் செய், ராணுவத்தில் சேர்ந்துகொள், தேசத்துக்கு சேவையாற்று. பெண்களை துன்புறுத்துவது ஆண்மையின் வெளிப்பாடு அல்ல, அந்த எண்ணத்தை நாங்கள் அகற்றுவோம். இது என் எச்சரிக்கை" என் பொதுமேடையில் பேசினார் பவன் கல்யாண்.

சமூகத்தில் பெண்களின் பாத்திரத்தை எடுத்துரைக்கும் விதமாக, "எல்லா வீடுகளிலும் ஒரு பெண் இருக்கிறார். பெண்கள் இல்லாமல் இங்கு படைப்புகள் இல்லை." என்றார்.

மேலும், "காவல்துறையினருக்கு நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். பிதாபுரத்தில் நான் ஈவ் டீசிங் என்ற வார்த்தையைக் கூட கேட்கக்கூடாது. இது என் உத்தரவு." என்றார்.

பவன் கல்யாண்

"என்னால் இங்கு இருக்கும் பெண்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், நான் துணை முதலமைச்சராக இருப்பதற்கு என்ன அர்த்தம்?" என விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பினார் பவன் கல்யாண்.

பொது இடங்களில் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரிப்பதாகவும் ஆந்திராவில் பேச்சுகள் எழுந்த நிலை இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

ஈரோடு இடைத்தேர்தல்: ``நிச்சயம் நியாயமாக நடக்காது என்பதால்..'' -எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதி... மேலும் பார்க்க

டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமை அலுவலகம்... ஜன.15-ம் தேதி திறப்பு!

1930ம் ஆண்டு துவங்கிய பயணம்..சுதந்திரப்போராட்ட காலத்திலும் சரி, சுதந்திரத்திற்கு பிறகும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் நிரந்தமாக இருந்ததில்லை. அதன் அலுவலகம் டெல்லியில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. ... மேலும் பார்க்க

`90 மணிநேர வேலை கேட்பவர்கள் வரிச்சலுகை வேண்டாம் என்பார்களா?’- இதுவும் நாட்டின் பொருளாதாரம்தானே பாஸ்?

ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் பெற்ற உரிமை!உலகின் பல நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாய வேலை செய்யும் கொடுமைக்கு தள்ளப்பட்டதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத்தாரா?

Doctor Vikatan:சமீபத்தில் பயங்கரமாக உடல் எடை குறைந்திருக்கிறார். 90 நாள்களுக்கு வெறும் வெந்நீரும் புரோட்டீனும் மட்டுமே எடுத்துக்கொண்டுதான் எடை குறைத்தார் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படி வெறும்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தொடரில் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2025 குற்றவ... மேலும் பார்க்க