செய்திகள் :

`நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை' - வெளிநாட்டிலிருந்து வீடியோ பார்த்த கொடூர கணவன்!

post image

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹரைச் சேர்ந்த ஒரு பெண், ``என் கணவர் அவருடைய இரண்டு நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்து கொடுமை செய்தார்" எனப் புகார் பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக புலந்த்ஷஹர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்திருக்கும் புகாரில், ``என் கணவர் சவூதி அரேபியாவில் ஆட்டோ மொபைல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் கணவன் இந்தியா வந்திருந்தபோது அவருடைய இரண்டு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

பாலியல் வன்கொடுமை

என் கணவன் கண்முன்னே அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இதுகுறித்து பேசியபோது, அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும்படிக் கூறினார். என் குழந்தைகளுக்காக அமைதியானேன். ஆனால், அவர் மீண்டும் வெளிநாடு சென்றபிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக என் கணவரின் இரண்டு நண்பர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். என்னை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை என் கணவருக்கு அனுப்பி, அவரும் அதை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார்.

இதற்காக என் கணவருக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் எனக்குத் தெரிந்து அவரிடம் கேட்டபோது, விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்போது அவர் இந்தியா வந்திருக்கிறார். என் சகோதரியின் கணவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, அவருக்கு இதுபற்றி தெரிந்ததால் என் குடும்பத்தாருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் இப்போது என் கணவர் மீது வழக்குப் பதிவு செய்கிறேன்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

என் கணவர் மீது, அவருடைய இரண்டு நண்பர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை இதுவரை, அந்த இரண்டு நண்பர்களை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

`5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' -8 மாதங்கள் ஃபிரிட்ஜில் இருந்த பெண்ணின் உடல்... பகீர் பின்னணி

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இடையே தகராறு ஏற்படும் போது அது வன்முறையில் முடிந்து விடுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் அது போன்று லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத... மேலும் பார்க்க

நண்பர்களுக்கு வீடியோ காட்டிய காதலன்; 5 ஆண்டுகளில் மாணவியை வன்கொடுமை செய்த 62 பேர் - கேரளா அதிர்ச்சி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பான குடும்பஸ்ரீ அமைப்பின் சினேகித ஜென்டர் ஹெல்ப் டெஸ்க் மூலம் தனக்கு நேர்ந்த பா... மேலும் பார்க்க

Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன மோசடி; பின்னணி என்ன?

பீகாரில் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலை... மேலும் பார்க்க

MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டகாசம்!

இப்போதெல்லாம் நம்ம ஊரில் சந்து பொந்து, இண்டு இடுக்கிலெல்லாம் டிராஃபிக் போலீசார் ஸ்வைப் மிஷினுடன் நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.ம... மேலும் பார்க்க

கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோதரர்கள் கூறுவதென்ன?

17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.காணாமல் போன இவரைக் கொலை செய்ததாக இவரது உறவினர் மற்றும் மூன்று சகோதரர்கள் என 4 பேர் தண்டனை அனுபவித்துள்ளனர் என்ப... மேலும் பார்க்க

பல்லடம்: அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பாஜக தொண்டரிடம் ரூ.30,000 பிக்பாக்கெட்... போலீஸ் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வ... மேலும் பார்க்க