செய்திகள் :

MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டகாசம்!

post image

இப்போதெல்லாம் நம்ம ஊரில் சந்து பொந்து, இண்டு இடுக்கிலெல்லாம் டிராஃபிக் போலீசார் ஸ்வைப் மிஷினுடன் நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்

ஆனால், சாலையில் நடந்து சென்றவர் ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நம் ஊரில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில்.

மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியான சுஷில்குமார் சுக்லா, தன் வீட்டு நிகழ்ச்சிக்கு வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து வரப் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குச் சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் சுக்லாவை நிறுத்தி "ஹெல்மெட் ஏன் போடவில்லை?" என்று கேட்க, "நடந்து செல்வதற்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். அதைப் பற்றி கவலைப்படாமல், அதட்டலாக 300 ரூபாய் அபராதம் செலுத்தக் கூறியுள்ளனர். முடியாது என்ற சுக்லாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஹெல்மெட்
ஹெல்மெட்

வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்லவேண்டும், விட்டு விடுங்கள் என்று அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். அதன் பின்பு இரக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் ஒன்றின் பதிவு எண்ணில் சுக்லா பெயரில் ஹெல்மெட் வழக்குப்பதிவு செய்து 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

இதனால் மனம் நொந்துபோன சுக்லா, ஊரிலுள்ள உறவினர்களிடம் தனக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். அதோடு பன்னா மாவட்ட எஸ்.பி-யிடம்  புகாராகக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த எஸ்.பி, தற்போது சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் முழுவதும் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நண்பர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை' - வெளிநாட்டிலிருந்து வீடியோ பார்த்த கொடூர கணவன்!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹரைச் சேர்ந்த ஒரு பெண், ``என் கணவர் அவருடைய இரண்டு நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்து கொடுமை செய்தார்" எனப் புகார் பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக புலந்... மேலும் பார்க்க

Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன மோசடி; பின்னணி என்ன?

பீகாரில் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலை... மேலும் பார்க்க

கொலைசெய்யப்பட்ட நபர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு; தண்டனை அனுபவித்த சகோதரர்கள் கூறுவதென்ன?

17 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.காணாமல் போன இவரைக் கொலை செய்ததாக இவரது உறவினர் மற்றும் மூன்று சகோதரர்கள் என 4 பேர் தண்டனை அனுபவித்துள்ளனர் என்ப... மேலும் பார்க்க

பல்லடம்: அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் பாஜக தொண்டரிடம் ரூ.30,000 பிக்பாக்கெட்... போலீஸ் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வ... மேலும் பார்க்க

`எங்களை ஒண்ணும் பண்ண முடியாது!' - முதியவரைத் தாக்கிய மூவர்... திருச்சி அதிர்ச்சி!

திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்ற சுமார் 70 வயது முதியவர் ஒருவரை இருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அரிவாளை காட்டியும... மேலும் பார்க்க

இளம்பெண்ணை குத்திக் கொலைசெய்த சக ஊழியர்; தடுக்க முயலாமல் வீடியோ எடுத்த மக்கள் - புனே அதிர்ச்சி!

புனே எரவாடாவில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தவர் சுபதா(28). இவர் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கிருஷ்ணா என்பவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி இருக்கிறார். இப்பணத்தை கிருஷ்ணா கேட்டபோது கொடுக்காம... மேலும் பார்க்க