ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்
உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இன்று பிற்பகல் இடிந்து விழுந்ததில் சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கும் சிக்கியிருக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் ஆறு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
முதல்கட்ட தகவல்களின்படி கட்டுமானத்தில் இருந்த கூரையின் ஷட்டர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட நீதிபதி சுப்ரந்த் குமார் சுக்ல் கூறினார், அவர் மற்ற மூத்த அதிகாரிகளுடன் மீட்புப் பணியை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.