செய்திகள் :

தில்லியில் சூடுபிடிக்கும் தேர்தல்: பாஜக - ஆம் ஆத்மி இதற்டையே போஸ்டர் போர்!

post image

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே போஸ்டர் போர் வலுத்துள்ளது.

பாஜகவின் கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பற்றி ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தில் வரும் அரக்க ராஜாவின் படத்துடன், முகத்தை மட்டும் ரமேஷ் பிதுரியுடையதை இணைத்து, பாஜகவின் அட்டூழியக்காரர், முதல்வர் முகம் என்று பதிவிட்டுள்ளது.

சும்மா இருக்குமா என்ன பாஜக. சொந்தமாக போஸ்டர் அடித்து ஆம் ஆத்மியை காலி செய்திருக்கிறது. ஷீஷ்மஹாலில் வசிக்கும் ஆம் ஆத்மி ராஜா, துரத்தப்பட வேண்டியவர் என்பதை தில்லி மக்கள் முடிவு செய்வார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட போஸ்டரில், மிக மோசமான கட்சியின் மோசமான வேட்பாளர் என்று வர்ணித்து போஸ்டர் வெளியிட்டிருந்தது.

அதில், பாஜகவின் மூத்த தலைவர்களான அமித் ஷா, நட்டா, ரமேஷ் பிதுரி உள்ளிட்டவர்களின் புகைப்படங்களையும், அவர்கள் சொன்ன மோசமான கருத்துகளையும் வெளியிட்டு போஸ்டர் அடித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தது. இப்படி, தில்லியில் பிரசாரம் சூடுபிடித்ததோ இல்லையோ, போஸ்டர் போர் தீவிரமடைந்துள்ளது. தில்லி மக்களுக்கும், போஸ்டர் கிரியேட்டர்களின் உருவாக்கத் திறன் பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தேர்தலும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

பிராண பிரதிஷ்டை முதலாம் ஆண்டு விழா: யோகி ஆதித்யநாத் வழிபாடு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு முதலாமாண்டு விழாவையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்... மேலும் பார்க்க

உ.பி.யில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது!

உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்று இன்று பிற்பகல் இடி... மேலும் பார்க்க

மகப்பேறுக்காக சென்ற பெண் பலி! மேற்கு வங்கத்தைத் தொடரும் மருத்துவத் துறை புகார்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்ற பெண் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் அரச... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்க உத்தரவு!

தேசிய கல்விக் கொள்கையின் படி அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், 8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு ஹரியானா முதல்வர் உத்தரவ... மேலும் பார்க்க

90 மணி நேரம் வேலை.. எல்&டி தலைவருக்கு 535 மடங்கு சம்பளமாம்!

வீட்டில் மனைவி முகத்தை எத்தனை மணி நேரம் பார்ப்பீர்கள் என்றும் அதிக நேரம் அலுவலகத்தில் பணியாற்றுமாறும் வலியுறுத்தியிருந்த எல்&டி நிர்வாகி சுப்ரமணியன், ஊழியர்களை விட 535 மடங்கு சம்பளம் வாங்குவதாகத் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: சரணடைந்த நக்சல்களுக்கு 43 லட்சம் வெகுமதி!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 9 பேர் ரூ. 43 லட்சம் வெகுமதியுடன் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் ஏமாற... மேலும் பார்க்க