செய்திகள் :

மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை "அப்பா, அப்பா" என வாய்நிறைய அழைக்கும்போது அளிவில்லை மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை(ஜன.11) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

நான் முதல்வன் திட்டம்

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன் திட்டம்’. எத்தனையோ தொழில்களைத் தொடங்குகிறீர்கள், அதிலே பணியாற்ற திறமைசாலிகளாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள் என்று சொன்னதை வைத்துதான், இந்தத் திட்டத்தை உருவாக்கினேன். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது.

பயிற்சி பெற்ற, பல இலட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில், இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது. இதுதான் விடியல் ஆட்சி.

புதுமைப் பெண் திட்டம்

அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர், கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப் பெண் திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது.

"அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி

இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 இலட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார்,என் குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. பணம் இல்லை, அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார். புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், என் அம்மா சம்மதம் தெரிவித்தார். ஆனால், நாள்தோறும் பேருந்தில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார்.

அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன்.

ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி நான் தற்போது படித்துக்கொண்டு வருகிறேன்” என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான், விடியலுக்கான சாட்சி.

அதனால்தான், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா, அப்பா’ என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இந்தப் பாச உணர்வுதான் முக்கியம்.

இதையும் படிக்க |பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஊட்டச்சத்தை உறுதி செய்

போதிய சத்து இல்லாமல் பிறக்கிற குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மூலமாக தீவிர ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டன. அதில், தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 6 மாதத்திற்குட்பட்ட 76 ஆயிரத்து 705 பச்சிளம் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுடைய பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. இதனால்தான், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் காலையில் 17 இலட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவியர் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள். அந்தத் திட்டத்தை தொடங்கியபோது, காலை உணவு சாப்பிட்ட பிள்ளைகளின் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தத் திட்டத்தைப் பற்றி மதுரை மாணவி ஹரிணி சொல்லியிருந்த காட்சியை நான் விடியோவில் பார்த்தேன். அவர், “நான் நாள்தோறும் காலையில் சாப்பிட மாட்டேன். ஆட்டோ வந்ததும் ஓடி வந்து ஏறிவிடுவேன். சாப்பிடாமல் வருவதால் ஸ்கூலுக்கு வந்ததும் தண்ணி குடித்துக்கொள்வேன். ஆனால், இப்போது கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதனால் தெம்பாகப் படிக்கிறேன்” என்று சொன்னதைக் கேட்டபோது, நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக மிகமிக பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தேன். இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் சொல்லத் தொடங்கினால் எதிர்க்கட்சியினர் அதிகமான வேதனையை அடைவார்கள் என்பதால் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன் என்றார்.

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சிங்கப்பூர் அதிபர் இந்தியா வருகை!

கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நாட்டு அதிபர் முதல்முறையாக அரசுப்பயணமாக இந்தியா வருகிறார்.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜன.14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தி... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! படுகாயமடைந்த சிறுவன்!

புது தில்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியின் பி-ப்ளாக்கில் உள்ள தனது வீட்டின் வாசலில் நேற்று (ஜன.... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாள்கள் ... மேலும் பார்க்க

கிராமவாசிகள் நோய்வாய்ப்பட தடை! எங்கு?

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தில் உள்ளூர் மக்கள் நோய்வாய்ப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கட்டன்சாரோ மாகாணத்திலுள்ள பெல்காஸ்ட்ரோ எனும் கிராமத்தின் மேயர் அண்ட... மேலும் பார்க்க

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?

தமிழக பாஜகவில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாஜக தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை... மேலும் பார்க்க